- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

நிலம் சம்மந்தமான ஆவணங்கள் வேண்டுதல் தொடா்பாக

மனு எண்: தொடுவானம்/9256/30/03/2012
துறை: மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்
கிராமம்: ,புளியங்குளம்

அனுப்புநர் :
அ.ஆதிவளவன்,
த-பெ. அம்மாசி
1-69 ஆதிதிராவிடா் காலனி
சி.புளியங்குளம்
மதுரை தெற்கு வட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டத்தில் 1919 முதல் 1950 வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் என்ன பெயரில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிலங்கள் அரசு எதன் அடிப்படையில் அந்த நபா்களுக்கு வழங்கப்பட்டன என்ற விபரம் அப்படி வழங்கப்பட்ட நிலங்களை அந்த மக்கள் விறபனை செய்யலாமா அல்லது கூடாதா என்றும் அதற்க்கான அரசு ஆணைகள் உள்ளவையா என்ற விபரம் அந்த நிலங்களை அந்த மக்கள் தவிர வேறு சாதியினா் கிரையம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாமா அதற்கு ஏதும் நிபந்தனைகள் உள்ளனவா போன்ற விபரங்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "நிலம் சம்மந்தமான ஆவணங்கள் வேண்டுதல் தொடா்பாக"

#1 Comment By dadwomdu On April 9, 2012 @ 6:48 pm

தங்கள் மனு ஏற்கப்பட்டது.
தாங்கள் கேரரிய விபரங்கள் தொடர்புடைய தனிவட்டாட்சியர்கள் வாயிலாக பெற்று தங்களுக்கு வெகுவிரைவில் பதில் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தொடர்புடைய தனிவட்டாட்சியர்களிடமிருந்து விபரங்களை தங்களுக்கு நேரிடையாக அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விபரங்களை பெற்று முடிவான அறிக்கை பின்னர் தங்களுக்கு தெரிவிக்கப்படும்.

#2 Comment By dadwomdu On May 8, 2012 @ 11:43 am

மனுதாரரிடம் இருந்து ்பெறப்பட்ட மனமீதான கேரரிக்கை 1919-1950 வரை இவ்வலுவலகத்தில் இல்லைஎனவே நில ஆவணக்காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ள்து என்பதை மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9256/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.