மனு எண்:

ஆகிரமிப்பு அகட்ருதல்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சத்தியபுரம் கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வனக்கம்,
நாங்கள் நாவினிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
முத்திருளாண்டிபட்டடி கிராமத்ததிற்கு செல்லும் வழியில் கட்ட பிச்சன் முத்து கருப்பு கோன் ஏந்தல் கன்மாயில் தனி நபர் கேணீ அமைத்து ஆகிரமிப்பு செய்துள்ளார். அதனை அகற்றி தருமாறு மிகவும் தாழ்மை உடன் கேட்டுக் கொள்கிறோம்.

4 Responses to “ஆகிரமிப்பு அகட்ருதல்”

 1. eepwdperimdu says:

  மேலுர் வட்டம் நாவினிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்திருளாண்டிபட்‌டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள கட்டபிச்சான்முத்துகருப்புகோன்ஏந்தல் கண்மாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாகும். கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றும் பொருட்டு கண்மாயினை அளந்து நான்குமால் காட்ட சர்வேயர் ஓருவரை நியமித்து தரும்படி வட்டாசியர் மேலுார் அவர்களுக்கு இவ்வலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டு நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது. கண்மாய் அளவை செய்யப்பட்டு படிவம்-1 பெறப்பட்ட பின் 10 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பு உரிய முறையில் அகற்றப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 2. executive engineerperiyar vaigai basin division says:

  நாவினிப்பட்டி ஊராட்சி முத்திருளாண்டிபட்டியில் உள்ள கட்ட பிச்சன் முத்துக் கருப்புக் கோன் ஏந்தல் கண்மாய் செயற்பொறியாளர், பொபது, நீஆஅ., பெரியாறு பிரதானக் கால்வாய் கோட்டம், மேலூரைச் சார்ந்ததாகும். எனவே மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக மேலூர் பெரியாறு பிரதானக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 3. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  நாவினிப்பட்டி ஊராட்சி முத்திருளாண்டிபட்டியில் உள்ள கட்டபிச்சன் முத்துக் கருப்பக்கோன் ஏந்தல் கண்மாய் பொதுப்பணித்துறையைச் சேர்ந்தது. எனவே இவ்வொன்றியத்தின் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற இயலாது என்ற விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  ———————
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்.

 4. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  நாவினிப்பட்டி ஊராட்சி முத்திருளாண்டிபட்டியில் உள்ள கட்ட பிச்சன் முத்துக் கருப்புக் கோன் ஏந்தல் கண்மாய் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த கண்மாய் ஆகும். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற மனுதாரர் பொதுப்பணித்துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
  ———————
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்.