மனு எண்:

மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி வேண்டி

அனுப்புநர்: தலைவர்,
குறிச்சிபட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

குறிச்சிப்பட்டி கிராமத்தில் வீட்டு
இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும் அதிகமாக இருக்கின்றபடியாய் குடிநீர்
பிரச்சனை அதிகமாக உள்ளது.
மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.குடிநீர் சீராக விநியோகம்
செய்யமுடியவில்லை.அதனால் பொதுமக்கள் நலன் கருதி குறிச்சிப்பட்டி
கிராமத்திற்கு போர்வெல்லுடன் கூடிய மேல்நிலைத்தொட்டி புதியதாக அமைத்துத் தர
வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
தலைவர்
குறிச்சிப்பட்டி
ஊராட்சி
மேலூர் ஊராட்சி
ஒன்றியம்

2 Responses to “மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி வேண்டி”

 1. bdomelmdu says:

  குறிச்சிப்பட்டி ஊராட்சியில் தற்போது 2012-2013 ஆம் ஆண்டிற்கான தாய்த் திட்டப்பணிகளுக்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தாய்த்திட்ட தேவைப்பட்டியலில் பேர்வெல்லுடன் கூடிய மேல்நிலைத் தொட்டி அமைக்கும் வேலையைச் சேர்த்து தாய்த்திட்ட நிதியிலிருந்து செய்து கொள்ள ஊராட்சிமன்ற தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
  ————————
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம்‌, மேலுார்.

 2. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  குறிச்சிப்பட்டியில் போர்வெல்லுடன் கூடிய மேல்நிலைத் தொட்டி அமைக்க செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், மதுரையை அணுகுமாறு மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  ————————
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம்‌, மேலுார்.