மனு எண்:

குடிநீர் வச்தி வேண்டி

அனுப்புநர்: தலைவர்
அம்பலகாரன்பட்டி,
மேலூர்ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அம்லகாரன்பட்டி
கிராம‌த்தில் அமைந்துள்ள அரசுபல்வகை தொழில்நுட்பக்கல்லூரியில் சுமார் 700
மாணவர்கள் பயில்கின்றனர்.மாணவர்கள் குடிநீர் தேவைக்காக சுமார் 2கி.மீ
சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.படிக்கும் மாணவர்களுக்கு மிகவும்
சிரமமாக உள்ளது.மாணவர்கள் சிரமத்தை போக்க புதிய போர்வெல் போட்டு 60,000லி
கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்துத்தரும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
தலைவர் அம்பலகாரன்பட்டி

3 Responses to “குடிநீர் வச்தி வேண்டி”

 1. tvmadmin says:

  மதுரை மாவட்டம் அம்பலகாரன்பட்டியில் புதிய டேங் அமைக்க தற்போது குடிநீர் வாடிகால் வாரியத்தில் நிதி ஆதாரம் இல்லை. மேலும் மேலுர் வட்டத்தில் மேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் காவிரி ஆற்று நீர் இந்த நிதியாண்டில் வழங்கபட உள்ளதால் வாரியத்தின் மூலம் வேறு எந்த பணிகளையும் செய்ய இயலாது.

 2. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  அம்பலகாரன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லுாரியில் 60000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க இவ்வொன்றியத்தின் மூலம் செய்ய இயலாது என்பதை மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  ——————–
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

 3. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  அம்பலகாரன்பட்டி அரசு பல்வ‌கை தொழிற்நுட்பக் கல்லுாரியில் மாணவர்கள் குடிநீர் தேவைக்காக 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்க செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், மதுரையை அனுகுமாறு மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  ——————–
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்