மனு எண்:

அனுப்புநர் :
அ.பாத்திமாமேரி,
28 லூா்துநகா் 6வது தெரு,
கே.புதூா்
மதுரை 7

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மேற்படி முகவரியின் எனக்கு சொந்த இடமான மேல்தளத்தை வாடகையின்பேரில் கே.புதூா் கிளை நூலகம் இயங்கிவருகிறது. கட்டிட பராமரிப்பு வாடகை உயா்வு காரணமாக 2009 முதல் காலிசெய்ய சொல்கிறோம். இதுதொடா்பாக தங்களிடம் 5.4.11 கடிதம் மூலமாகவும் 6.2.12 மனுநீதிநாளன்று நேரிலும் விண்ணப்பத்தில் 7.2.12 அன்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வந்து பார்வையிட்டு ஆவணசெய்து உதவுதாக கூறிசென்றனா். இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே விரைவில் மேற்படி நூலகத்தை காலி செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அ.பாத்திமாமேரி.

One Response to “கே.புதூா் கிளை நூலகத்தை காலிசெய்து தொடா்பாக.”

  1. dlomdu says:

    மேற்காணும் பொருள் தொடர்பாக இவ்வலுவலக ந.க.எண் 2722/இ/2011. நாள்.9.04.2012 ன்படி மேற்படி கிளை நுாலகத்தை மதுரை கே.கே.நகர் எல்.ஐ.ஐி காலனி குடியிருப்போர் பொது நலச் சங்கத்திற்கு சொந்தமான இலவசக் கட்டிடத்தில் மாற்றம் செய்வதற்கு கிளை நுாலகருக்கு அறிவுறுத்தப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 தினங்களில் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.