மனு எண்:

இணைப்புச் சாலை வேண்டுதல்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
பொக்கம்பட்டி கிராமம்,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

பொக்கம்பட்டி ஊராட்சியில் பெரிய பொக்கம்பட்டி மற்றும் சின்ன பொக்கம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையில் செல்வதற்கு குறுக்கே பெரிய கண்மாய் உள்ளது. தற்போது இந்த இரண்டு கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் செல்வதென்றால் கண்மாய் வழியாக குறுக்கே தான் நடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இந்த கிராமங்களுக்கு செல்வதென்றால் 5 கி.மீ சுற்றித் தான் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையே ஒரு பாலம் ஒன்றும், தார்ச் சாலையும் அமைத்துத் தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

One Response to “இணைப்புச் சாலை வேண்டுதல்”

  1. bdotmmmdu says:

    ந.க.எண். 474/12/தி1 நாள். 04.05.2012

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொக்கம்பட்டி ஊராட்சியில் பெரிய பொக்கம்பட்டி மற்றும் சின்ன பொக்கம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையில் செல்வதற்கு குறுக்கே பெரிய கண்மாய் உள்ளது. ஆக‌வே பாலம் வேண்டி மனுதாரர் கோரியுள்ளார்.
    ‌மேற்படி இடத்திற்கு பாலம் மற்றும் தார்ச்சாலை அமைத்திட ஏதுவாக ஆய்வு செய்து அறிக்கை அளித்திட இவ்வொன்றிய பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிக்கையின்படியும், தேவை மற்றும் நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.