மனு எண்:

அனுப்புநர் :
செங்கப்படை கிராம அனைத்து மகளிர் குழுக்கள், மற்றும் பொதுமக்கள்,
திருமங்கலம் வட்டம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

செங்கப்படை கிராமத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசின் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களின் ஒருமித்த கருத்தாகும்.
ஏனென்றால் இதனால் ஏற்படும் இன்னல்களும் பொருளாதார சீரழிவும் சொல்லெனா துயரத்திற்கு தினம் தினம் ஆளாகி கொண்டுவருகிறோம்.
தினம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் குடும்பங்களில் குடித்துவிட்டு வரும் வருவாய் ஈட்டாளர்களா் அவர்களின் வருவாயை இழந்து எங்களின் குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னம் ஆகிக்கொண்டுவருகிறது. இந்ிநலை நீடிக்குமேயானால் நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோம். வருமைப் பிடியில் சிக்கி எங்களது குடும்பங்கள் தவறான பாதையில் செல்லும் நிலைக்கு வந்துவிடும். கடந்த காலங்களிலும் தற்போது குடிகார கணவன்களாலும் பிள்ளைகளாலும் கணவரை விட்டு மனைவி பிாிவதும் குடும்பத்தை விட்டு பிள்ளைகள் அனாதையாக்கப்படுவதும் இன்னும் ஒரு சில குடும்பங்களின் உயிாிழப்பும் தற்கொலையும் நடந்துள்ளது. இதற்கு மூலகாரணமாக இருபபது அரசின் மதுபானக்கடையே என நம்புகிறோம்.
எனவே தாங்கள் செங்கப்படை கிராமத்தில் இயங்கி வரும் மதுபானக்கடை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

One Response to “மதுபான கடையை அகற்றுதல் தொடர்பாக கடை எண்.”

  1. dmtasmacmdu says:

    டாஸ்மாக் சில்லறை வியாபாரம் தொடங்கியது முதல் செங்கப்படை கிராமத்தில் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடை எண்.(5509) பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமலும் ஆட்‌சேபனையின்றியும் செயல்பட்டு வருகிறது. முறையாக மதுக்கூடம் உரிமம் வழங்கப்பட்டு மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இருந்தபோதும் தற்‌போது ஆட்சேபனை மனு பெறப்பட்டுள்ளது. எனவே இம்மனு மீது உரிய விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரனையின் இறுதி நிலவரப்படி கடையை இடமாற்றம் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட மேலாளர், டாஸ்மாக் லிட்,மதுரை.