மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
கோட்டநத்தம்பட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்களது கிராமத்தை முன்மாதிரி கிராமமாக தாங்கள்
தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.அதற்காக‌ எங்கள் கிராமத்தின் சார்பாக நன்றியை
தெரிவித்துக்கொள்கிறோம்.எங்கள் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தை சுற்றி
சுமார் 300மீ
பரப்பளவில் சுற்றுசுவர் இல்லாததால் அந்நியர்கள் இரவில் நுழைந்து அட்டகாசம்

செய்கின்றனர்,அதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பாதுகாப்பு
கேள்விக்குறியாய் உள்ளது.ஆதலால் சுற்றுசுவர் அமைத்துத் தரும்படி மிகத்
தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி ஐயா

இப்படிக்கு

ஊர்பொதுமக்கள்

2 Responses to “ஊராட்சிமன்ற அலுவலக‌ சுற்றுச்சுவர் வேண்டி”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  கோட்டநத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக சுற்றுச்சுவர் கட்ட ஊராட்சி ஒன்றியம் மூலம் செய்ய இயலாது என மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  ———————
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்.

 2. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  கோட்டநத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு போதிய நிதி வசதி ஊராட்சி நிதியில் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சிறப்பு நிதி ஏதும் வரப்பெற்றால் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக சுற்றுச்சுவர் கட்டலாம் என மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

  ———————-
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்