மனு எண்:

அனுப்புநர்: சு.கஸ்துாரி
க/பெ.சுப்பிரமணியன்
தும்பைப்பட்டி (அஞ்சல்)
மேலுார் (தாலுகா)
கொட்டாம்பட்டி ஒன்றியம்
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அனுப்புநர்: சு.கஸ்துாரி
க/பெ
.சுப்பிரமணியன்
தும்பைப்பட்டி (அஞ்சல்)
மேலுார் (தாலுகா)
கொட்டாம்பட்டி ஒன்றியம்
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் உயில்பத்திரம் 408/1994ன்படி எனக்கு சொத்துகள் எழுதி வைத்திருந்தார். அந்த சொத்துக்களை நான் வரி வகையராக்கள் வைத்து எனது அனுபவத்தில் வைத்து அனுபவித்து வந்தேன். இந்நிலையில் எனக்கு தெரியாமல் கீழ்க்கண்ட சர்வே நம்பர்களில் உள்ள சொத்துக்களை, இந்திரா தன் பெயரில் மாற்றி, அதை அவர் மகன் அய்யப்பன் பெயரில் மாற்றி மோசடி செய்துவிட்டார்கள். இதை அறிந்த நான் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனுச் செவேய்து இதுவரை ஐ எனக்கு எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை. ஐயா அவர்கள் மோசடியாக மாற்றிய எனது சொத்துக்களை எனக்கு மீட்டு, எனது பெயருக்கு பட்டா மாற்றித் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறறேன்.

சொத்து விபரம்
1) 54-11, 2) 54-9, 3) 54-5, 4) 54-6ஏ, 5) 55-5ஏ இந்த சொத்துக்கள் உயில்சாசனம் 408/1994ன்படி எனக்கு கிடைத்த ‌சொத்துக்கள். இதை தான் மோசடியாக இந்திரா பெயரில் மாற்றி, அவரது மகன் அய்யப்பன் பெயருக்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த மோசடியாக மாற்றிய எனது சொத்து எனக்கு மீட்டுத் தாருங்கள். எனது பெயருக்கு பட்டா மாற்றித் தாருங்கள் ஐயா.

இப்படிக்கு
சு.கஸ்துாரி

Tags: தும்பைப்பட்டி

Posted in அனைத்து துறைகள், வருவாய் கோட்டாட்சியர், மதுரை
One Response to “உயில் மூலம் எனக்கு பாத்தியமான எனது சொத்தை மோசடியாக எனக்குத் தெரியாமல் வேறு நபர் பெயரில் மாற்றியதை ரத்து செய்து எனது பெயருக்கு மாற்றித் தர வேண்டுதல்.”

rdomdu says:
March 20, 2012 at 12:22 pm

ஓ.மு. 1827-12-என் நாள்: 20.03.2012.
மனுதாரர் உயில் சாசனத்தின்படி தனக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் மோசடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மேற்கண்ட பட்டாவை ரத்து செய்து மனுதாரர் தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக் கோரியுள்ளார். இது தொடர்பாக, மனுதாரர் தனது கைவசமுள்ள ஆவண ஆதாரங்களுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு மனு சமர்ப்பித்து பரிகாரம் தேடிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

வருவாய் கோட்டாட்சியர், மதுரை.

மேற்கண்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் பதில் படி நான் ஏற்கனவே 27.02.2012ம் தேதி கேரரிக்கை எண். MT/12/03800 ன்படி மேல்முறையீட்டு மனு கொடுத்துள்ளேன். அதனுடன் தகுதந்த ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை. ஆகவே ஐயா அவர்கள் எனக்கு தகுந்த நீதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
சு.கஸ்துாரி

One Response to “எனது கேரரிக்கை எண். MT/12/03800 ன்படி எனது மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பது சம்பந்தமாக.”

  1. rdomdu says:

    ந.க. 2391-12-என் நாள் 3.4.12
    மனுதாரின் மனுவானது மேல்முறையீட்டு மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆகையால் வருகிற 8-5-2012 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் தன் கைவசம் உள்ள ஆவண ஆதாரங்களுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி மனுதாரர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
    வருவாய் கோட்டாட்சியர், மதுரை.