மனு எண்:

அனுப்புநர்: வெ.சுப்பக்காள்
எஸ்.பி.நத்தம் கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா எனது பெயர் வெ.சுப்பக்காள், நான் 1962 முதல் இன்று வரை கிட்டதட்ட 50 வருடங்களாக எஸ்.பி.நத்தம் கிராமத்தில் வசித்து வருகின்றேன்.நான் இரண்டு கைகளும் ஊனமுற்றவள்.எனது வீட்டு மனனையின் நிலம் 45 அடி நீளம் உடையது.மீதம் உள்ள எனது 5அடி நிலத்தையும்,அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும், தற்போது 1வது வார்டு உறுப்பினர் நிறைகுளம் என்பவர் எந்த ஒரு ஆவணமும் இன்றி தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலர் இல்லாத நேரத்தில், தலையாரி பாலசுப்பிரமணியன் மற்றும் சர்வேயர் போன்ற அரசாங்க பதவியில் உள்ளவர்களுக்கு 20000 பணம் கொடுத்து கடந்த17-3-2012 அன்று நிலத்தை அளந்து தன் வசம் கையகப்படுத்திகொண்டார்.மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்த நிலம் உனக்கு எப்படி சொந்தம் என்று கேட்டபோது அதிகார குரலில் ஆட்கள் வைத்து கொண்டு மிரட்டுகிறார்.எனக்கு நீதி கிடைக்க தயவு செய்து தங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி ஐயா
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வெ.சுப்பக்காள்

One Response to “நில ஆக்கிரமிப்பு தடுக்க வேண்டி விண்ணப்பம்”

  1. tahtmmmdu says:

    17.03.2012 அன்று குராயுர் குறுவட்ட அளவர் மனுதாரர்- புகார் செய்த நாளில் புலத்திற்கு ஆஜராகவில்லை எனவும் பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.மனு தள்ளுபடி.