- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

‌ரேசன் கார்டு பதிவு செய்வது சம்மந்தமாக

மனு எண்: தொடுவானம்/9105/22/03/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட வழங்கல் அலுவலர்
கிராமம்: ,சின்னக்கட்டளை

அனுப்புநர்: தலைவர்,
சின்னக்கட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.எனக்கு வயது 21 ஆகின்றது.எனக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் எனது மகனுக்கு புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய கார்டில் மகன் பெயரையும். என்னுடைய சம்மந்தகாரர் கார்டில் எனது மருமகள் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன்.
மேலும் எனது மகனுக்கு புதிய ரேசன் கார்டு வாழங்குவதற்கு வட்ட வழங்கல் ‌அதிகாரி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுஎண் 1318/11 நாள் – 19.09.2011
ஆறு மாதம் மேலாகியுள்ளதால் எனக்கு தாங்கள் புதிய புதிய ரேசன் கார்டு வாழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
வே.அங்கம்மாள்
தலைவர்
சின்னக்கட்டளை ஊராட்சி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "‌ரேசன் கார்டு பதிவு செய்வது சம்மந்தமாக"

#1 Comment By dsupomdu On April 9, 2012 @ 3:29 pm

மனுதாரரது மனு மீது விசாரணை செய்து பரிந்துரை செய்யப்பட்டு புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்க எல்காட் நிறுவனத்திற்கு முன்னுரிமைப்படி அனுப்பப்படவுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

வட்ட வழங்கல் அலுவலர்
பேரையூர் வட்டம்


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9105/%e2%80%8c%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.