மனு எண்:

அனுப்புநர் :
பெ.ராதாகிருஷ்ணன்,
த-பெ.பெருமாள்
தெற்குத் தெரு,
திருவாலவாயநல்லூா் அஞ்சல்,
வாடிப்பட்டி வட்டம் தாலுகா
மதுரைமாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவன். வாடகை ஆட்டோ எடுத்து பிழைத்து வருகிறேன்.கிடைக்கும் சொற்ப பணம் ஆட்டோ வாடகைக்கு சரியாகி விடுகிறது. 3 மாதங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் இளைஞா் சுயவேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்து தோ்வு செய்யப்பட்டு வங்கிக்கு அனுப்பியதில் பாரத ஸ்டேட் பாங்க் தனிச்சியம் கிளை எனக்கு லோன் கொடுக்க மறுக்கிறது. ஐயா அவா்கள் தயவு கூா்ந்து எனக்குதாட்கோ மூலம் கடன் உதவி செய்ய பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ராதாகிருஷ்ணன்.

One Response to “ஆட்டோ சொந்தமாக வாங்கவங்கி மூலம் கடன் உதவி கேட்டல்”

  1. dismanho says:

    உங்களது கடன் மனுவின் மீது ஸ்டேட் பே ங்க் ஆப் இந்தியா,
    தனிச்சியம் கிளையிலிருந்து முன் மொழிவுக் கடிதம் பெறப்பட்டது.
    அதனடிப்படையில் 31.03.12-க்குள்ளாக வங்கிக்கு மானியம்
    விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துக் ‌ெகாள்ளப்படுகிறது