மனு எண்:

அனுப்புநர்: எஸ். முத்துலக்ஷ்மி, ஆர். ராமசுப்பிரமணியன்
19, 4 வது தெரு, கோவலன் நகர்,
மதுரை . 625003

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
தண‌க்கன்குளம் கிராமத்தில் இருந்த எஙகளுடைய வீட்டு
மனைகள், தேசிய நெடுஞ்சாலைப்பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை.
ஈட்டுத்தொகை கொடுப்பதற்கான கோப்புகள் கடந்த 7 மாதஙகளாக , மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரிவு
பி.8 / பி.9 – ல் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
விரைவில் எங்க‌ளுக்கு ஈட்டுதொகை வ‌ழ‌ங்க‌ மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் அவ‌ச‌ர‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்து உத‌விட‌ வேண்டுகிறோம். இது தொட‌ர்பாக‌, தொடுவான‌த்தில் முன்பே
ம‌னு எண்க‌ள் 6651 , 7358 அனுப்பியுள்ளோம்.
ப‌ணிவுட‌ன்,
முத்துல‌க்ஷ்மி , ராம‌சுப்பிர‌மணிய‌ன்.

One Response to “தேசிய‌நெடுஞ்சாலை பணி- நிலஎடுப்பு-ஈட்டு தொகை வேண்டி”

  1. apalandmdu says:

    மதுரை தெற்கு வட்டம், தனக்கன்குளம் கிராமம், புல எண். 30/16ல் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகம் செய்யப்பட்டமைக்கு திருமதி. முத்துலெட்சுமி என்பவருக்கு 119 ச.மீ-க்கு ரூ.16,908/-ம் திரு. ராமசுப்பிரமணியன் என்பவருக்கு 120 ச.மீக்கு ரூ.17,050/-ம் இழப்பீட்டுத் தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
    - தனிவட்டாட்சியர்(நிஎ), தேசிய நெடுஞ்சாலை எண்.49, மதுரை