மனு எண்:

மரம் வெட்டப்பட்டது தொடர்பாக

அனுப்புநர்:
இரா.இராஐசேகரன் அலுவலக உதவியாளர்
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் உயா்திரு மாவட்ட ஆட்சித்தலைவராகிய தாங்கள் செல்லும் இடமெல்லாம் நம்நாட்டின் இயற்கை வளத்தை பெருக்கி தொலைநோக்கு பார்வையுடன் மரங்களை நட்டு பசுமை புரட்சி ஏற்படுத்தவேண்டும் என்று தீவிர முயற்ச்சியில் செயல்படுத்திக்கொண்டும் இருக்கும் தருணத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள உதவி இயக்குநா் (ஊ) அலுவலக வளாகத்தில் இருந்த நன்கு வளா்ந்த பொிய இரண்டு மரங்களை சிலநாட்களுக்கு முன் (விடுமுறை நாட்களில்) மர்ம நபர்களால் மரங்களை தாங்கள் உத்தரவின் பேரில் வெட்டி அப்புறப்படுத்தி கொண்டு சென்று விட்டார்கள் இந்த உத்தரவு உண்மைக்கு புறம்பானது இதனை கண்டுபிடித்து மரம் வெட்டியவர்களை ஒரு மரத்திற்கு மூன்று மரங்கள் வீதம் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் தாங்கள் மூலம் மரம் நட்டு வளர்க்கவேண்டும் என உத்தரவு வழங்கவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

This post was submitted by bdouspmdu.

One Response to “மரம் வெட்டப்பட்டது தொடர்பாக”

  1. eepwdbuildmdu says:

    மதுரை உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலக ந.க.எண்.91ஃ2011ஃஅ1 நாள்: 12.1.2012ன் படி மேற்கண்ட அலுவலகத்தின் முன்பாக வளர்ந்திருந்த மரங்கள் மேற்கண்ட அலுவலக கட்டிடம் மற்றும் அதன் காம்பவுண்ட் சுவர் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் உள்ளதாக மேற்கண்ட அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டதன் பேரிலேயே கூவாபுல் மரம் 2 மற்றும் யுகலிப்டஸ் மரம் 1 ஆகியவை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மனுவில் குறிப்பிட்டுள்ளது போன்று அனுமதியின்றி வெட்டப்படவில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.