மனு எண்:

அனுப்புநர்: கிராம பொதுமக்கள்,
நாகமலை புதுக்கோட்டை,
கரடிபட்டி, பல்கலைநகர்,
மதுரை தெற்குதாலுகா,
மதுரை – 19.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நாகமலைபுதுக்கோட்டை, கரடிபட்டி, பல்கலைநகர் ஆகிய பகுதிகள் மொத்தம் 40,000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு இரவு ‌பேருந்து இல்லாத காரணத்தினால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். வெளியூர் சென்று இரவு 10.00 மணிக்குமேல் திரும்புவதால் ஆட்டோவில் அதிக கட்டணம் செலுத்தி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
ஆகவே ‌எங்கள் பகுதிக்கு மதுரை பெரியார் நிலையத்திலிருந்து மதுரை காமராசர் பல்கலைக்க‌ழகம் வரை இரவு பேருந்து ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

One Response to “”

  1. tnstccomml says:

    மேற்படி வழித்தடத்தில் இரவு சேவை இயக்கத்திற்கு போதிய அளவு பயணிகளன் அடர்த்தி இருக்க வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேலும் பொது மக்களின் வசதியினை கருத்தில்‌ கொண்டு தேனி வழித்தட புறநகர் ‌பேருந்துகளில் இரவு நேரங்களில் நாகமலைப்புதுக்கோட்டை மற்றும் பல்க‌லைக்கழகப் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல ஒட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    பொது மேலாளர் த.நா.அ.போ.கழகம் மதுரை.