மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. எங்களது ஊராட்சியில் மஞமலை என்ற காட்டாறு ஓடுகிறது அதில் மழைகாலங்களில் வரும் தண்னீர் வீணாக எங்களது ஊருக்கு பயன்படாம்மல் செல்லுகிறது எனவே ஆற்றின் குருக்கே சிரிய தடுப்பு சுவர் அமைத்தால் ஆற்றில் வரும் தண்ணீர் கண்மாய்க்கு செல்லும் இதனால் கண்மாய் நிரம்பி நிலத்தடி நீர் உயர்வதுடன் விவசாயிகள் பயன்பெருவார்கள் எனவே அய்யா அவர்கள் ஆற்றின் குறுக்கே அலைகள் அமைத்து தற ஆவனம்செய்யுமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2 Responses to “அலைகள் ஆற்றின் குறுக்கே அமைப்பது சம்மந்தமாக‌”

  1. executive engineerperiyar vaigai basin division says:

    தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ரூ.13.70 லட்சம் மதிப்பீட்டில் ராஜாக்கள்பட்டி கிராமத்தில் மஞ்சமலை ஓடையின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர், நிலநீர் வட்டம், மதுரை அவர்களால் ஒப்பந்தப்புள்ளி அழைக்கப்பட்டுள்ளது. இதன் மீது நடைமுறையில் உள்ள விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே தாங்கள் இப்பொருள் சம்பந்தமாக மேல்விபரங்களுக்கு செயற்பொறியாளர், பொபது, நீஆஅ., நிலநீர் கோட்டம், மதுரை அவர்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

  2. bdoalamdu says:

    மனுவி்ல் தெரிவிக்கப்பட்டுள்ள மஞ்சள்மலை காட்டாறு ஓடுகிற பகுதி மதுரை பொதுப்பணித்துறை வைகை டிவிசன்- கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே இது சம்மந்தமாக பொதுப்பணித்துறையினை அணுக தெரிவிக்கப்படுகிறது.