மனு எண்:

அனுப்புநர்: இரா.தனுஷ்‌கோடி,
தலைவர்,
ஊராட்சி அலுவலகம்,
கீழக்கோட்டை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

2011-2012ம் ஆண்டுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி – திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் – கீழக்கோட்டை ஊராட்சி – கீழக்கோட்டை ஆதி திராவிடர் குடியிருப்பு சமுதாயக் கூடம் கட்டும் பணியை மாற்றி மனமகிழ் மன்றம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்குவது சம்பந்தமாக

One Response to “மனமகிழ் மன்றம் – நிர்வாக அனுமதி வழங்கக் கேட்டல்”

 1. bdotmmmdu says:

  ந.க.எண். 1260/2011/அ3 நாள். 09.03.2012

  2011-12ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி ‌‌மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம் தாகூர், பரிந்துரை பணிகளில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பார்வை 1ன்படி கீழ்க்கண்ட வேலைக்கு (கலம் 2ன்படி) நிர்வாக அனுமதி வரப்பெற்றுள்ளது.
  நிர்வாக அனுமதி வரப்பெற்ற வேலையின் விபரம்: கீழக்‌கோட்டை ஊராட்சி கீழக்‌கோட்டை ஆதி திராவிடர் குடியிருப்புக்கு சமுதாய கூடம் கட்டுதல்
  மதிப்பீடு: ரூ.5.00 இலட்சம்
  திருத்திய நிர்வாக அனுமதி வரப்பெற்ற வேலையின் பெயர் விபரம்: கீழக்‌கோட்டை ஊராட்சி கீழக்‌கோட்டை ஆதி திராவிடர் குடியிருப்புக்கு மனமகிழ்மன்றம் கட்டுதல்
  மதிப்பீடு: ரூ.5.00 இலட்சம்
  ‌ மேற்காணும் ‌வேலைக்குரிய மதிப்பீட்டினை திட்ட இயக்குநர் அவர்களுக்கு நிர்வாக அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.