மனு எண்:

அனுப்புநர் :
அனுப்புநா்
திரு. ஷேக்தாவூத்,
தஃபெ.என்.ஒ.எச்.சிக்கந்தா்,
துணை கண்காணிப்பு பொறியாளா் – நெடுஞ்சாலை,
31, சிங்காரவேலர் தெரு,
மாதா கோவில் மெயின்ரோடு,
கே.புதூா், மதுரை- 7.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனது தந்தை என்.ஒ.எச.சிக்கந்தா் வீடு வாங்க பெற்ற கடன் முழுவதையும் செலுத்திய பின்பும் எங்களுக்கு வழங்க வேண்டிய தடையில்லாச்சா்ன்று வழங்க இரண்டு மூன்று வருடங்களாக கேட்டும் எங்களுக்கு வழங்கவில்லை தயவு செய்து தடையில்லாச்சான்று வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்களின் அலுவலக ஆா்.ஓ.சி எண்.வி3-226563-86 நாள் 24.07.1987.

One Response to “புகார் மனு – வீட்டுகடன் முடிவடைந்ததால் தடையின்னம சான்று வழங்க கோரியது”

  1. paacmdu says:

    மனுதாரர் தனது தந்தை வீடுகட்டும் முன்பணம் முழுவதையும் செலுத்தி விட்டதன் காரணமாக தடையில்லா சான்று வழங்க கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடன்தாரர் இறந்த பின்பு கடம்தாரருக்கோ அல்லது அவரது வாரிசுதாரருக்கோ தடையில்லா சான்று வழங்க அ‌ரசு விதிகளில் இடமில்லை. என வே மனுதாரருக்கு ஆவணங்களை விடுவித்து வழங்க, கடன்தாரர் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து இவ்வலுவலகத்தால் கேட்கப்பட்ட கூடுதல் விபரங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை வரவேண்டியுள்ளது. அவை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.