மனு எண்:

அனுப்புநர்: பாக்கியம்
க/பெ ராமர்
அல்லிகுண்டம்
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
மதுரை மாவட்டம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்து இரண்டு வருடங்காகின்றன. எனக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நான் மறுமணம் செய்யவில்லை. எனது கணவர் இறந்து விட்டதால் என்னால் குடும்பத்தை நடத்த இயலவில்லை. நான் ஆதரவற்ற விதைவைக்கான உதவித்தொகை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. எனவே சமூகம் அவர்கள் இமமனுவின் மீது ஆவனசெய்து எனக்கு ஆதறவற்ற விதைவைக்கான உதவித்தொகை வழங்க ஆவண செய்யவேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

One Response to “ஆதரவற்ரை விதவை உதவித்தொகை வழங்க கேட்டல்”

  1. tahsssuspmdu says:

    மனுதாரருக்கு உழைக்கும் திறன் உள்ளது. உதவித்தொகை கோரியுள்ளது தொடர்பாக மனுதாரர் தனது கணவரின் இறப்புச்சானைறினை கொடுக்கவில்லை.எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.