மனு எண்:

அனுப்புநர்: அச்சுராமன் த/பெ அழகன்
எர்ரம்பட்டி கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா. எனது பெயர் அச்சுராமன் எனக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் எனது கால் துண்டிக்கப்ப்ட்டு, இப்போது ஊனமுற்றவனாக இருக்கிறேன் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு தாய் தந்தை இருவருமே இறந்து விட்டார்கள் எனது மனைவியும் இறந்து விட்டார். எனக்கு யாரும் வேலைகொடுக்கவும் முன் வரவில்லை. எனவே வேலை இல்லாமலும் எனது பிள்ளைகளை வளைர்ப்பதற்க்கும் படிக்க வைப்பதற்க்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன் எனவே எனக்கு மாதம் தோறும் அரசு உதவி தொகை கிடக்க உதவுமாறு கேட்டுகொள்கிறேன்

One Response to “ஊனமுற்றோர் உதவி தொகை வழங்குவது சம்மந்தமாக‌”

  1. madurai says:

    மனுதார் கடந்த ஒரு வருடமாக எர்ரம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு இல்லை. பாலமேட்டில் குடியிருந்து வருவதாகவும், விபத்து நிவாரணத்தொகை நீதிமன்றத்தின் காப்பீட்டுத்தொகை பெற்று பாலமேட்டில் கடை வைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வா‌ழ்ந்து வருவதால் மனு தள்ளுபடி.