மனு எண்:

பணியாளர் நியமனத்தில் முறைகேடு

அனுப்புநர் :
பி.வீரணசிங்கம்,
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்,
மதுரை மாவட்ட தலைவர்,
இந்திய கம்யுனிஸ்ட் கட்சி,
மதுரை மேற்கு ஒன்றிய குழு உறுப்பினர்,
3-15-64, தெற்கு தெரு,
ஆனையுர், மதுரை-17.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 2007ம் ஆண்டில் 30 பணியாளர் பணியிடம் நிரப்புவதற்கு 557 மனுக்களும், 2007ம் ஆண்டு 18 உதவியாளர் பணியிடத்திற்கு 123 மனுக்களும், 2009ம் ஆண்டு 12 உதவியாளர் பணியிடத்திற்கு 124 மனுக்களும், 2010ம் ஆண்டு 17 பணியாளர் பணியிடத்திற்கு 186 மனுக்களும், 2010ம் ஆண்டு 19 உதவியாளர் பணியிடத்திற்கு 86 மனுக்களும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெறப்பட்டு நோ்முகத் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை மனுவுடன் இணைத்துள்ளேன். இது குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “பணியாளர் நியமனத்தில் முறைகேடு”

  1. poicdsmdu says:

    மேற்கண்ட மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.