மனு எண்:

அனுப்புநர்: சின்னச்சாமி s/o ராசுத்தேவர்
மெய்க்கிழார்பட்டி கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
நாமேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் திரு . சுமன் த/பெ .கருப்பத்தேவர் என்பவர் உதவி தெகை வழங்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவர் உதவி தொகை பெறப்படும் மனுவில் ஒவ்வொரு மனுவிற்கும் ரூ 5000/ ம் ரூபாய் வீதம் கேட்கிறார் எனவே சுமன் மீ து நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்தால் பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கும் என்தனை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

One Response to “சுமன் இள நிலை உதவியாளர் வட்டாட்சியர் அலுவலகம் உசிலம்பட்டிபணிஇடமாற்றம் செய்ய வேண்டி”

  1. rdouspmdu says:

    உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் திரு சுமன் என்பவர் மீது தனக்கு வேண்டிய நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, வாக்காளர் பட்டியல் சேர்ப்பு போன்றைவைகளில் தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார் என பொதுவான புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் இநிஉ திரு சுமன் என்பவரது நெருங்கிய உறவினர் மேக்கிழார்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்ததன் தொடர்ச்சியான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இம்மனு மீது நடவடிக்கை தேவையில்லை என முடிவெடுத்து இதன்படி முடிவு செய்யப்படுகிறது.