மனு எண்:

அனுப்புநர்: S. வெங்கடேஸ்வரன்,
S/o. சுப்பிரமணியன்,
1/64 வடக்கு தெரு
பொட்டப்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
பொட்டப்பட்டி கிராமம் சர்வே எண். 456/29 , எங்கள் குடும்பத்து பூர்வீக தாத்தா வழி சொத்து, ஒரே மகள் வாரிசான எனக்கும், எனது தம்பிகள் ராமன், ரெங்க கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் உரிமையானது. எங்களது பட்டா புழக்கத்தில் தெற்கு வடக்காக 10 மீட்டர் 8 பாயிண்ட் உள்ள இடத்தில் எங்கள் ஊரை சேர்ந்த நடேசன் மகன் ராமச்சந்திரன் என்பவர் 6 மீட்டர் நீளம் 30 பாயிண்ட் அகலத்தை ஆக்கிரமித்து கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி மாடி படி கட்டுவதை அறிந்து காவல் நிலையத்திலும், வட்டாச்சியர் அலுவலகத்திலும் பல முறை புகார் கொடுத்தும், சர்வேயர் மூலம் அளவுகள் செய்யப்பட்டும், இவர் ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கிறார். மேலும் எனது வீட்டையொட்டி 1 மீட்டர் 60 பாயிண்டில் பொது நடைபாதை இருந்து வந்தது. இதையும் அவர் 60 பாயிண்ட் இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13-09-11ல் மனு கொடுத்திருந்தேன். இதை முன்னிட்டு பொட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சகாதேவன் அவர்கள், நில அளவையின் போது ஆஜராகி நான் கையெழுத்து போட்டதை வைத்து, ஆக்கிரமிப்பு இல்லை என்று நான் ஒத்துக் கொண்டதாக ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே, பொய்யாக வட்டாட்சியர் மூலம் கடிதம் வரப்பட்டது. இதற்கு ஊராட்சி உதவியாளர் வெ.ஜெகநாதன் என்பவர் ராமச்சந்திரனுக்கு துணையாக செயல்படுகிறார். ஆகவே அய்யா அவர்கள் எங்கள் வீட்டு இடத்தை மீட்டு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே அறிக்கை சமர்ப்பித்தது மற்றும் வீட்டு இடத்தை மீட்டு தர வேண்டுதல் – சார்பு.”

  1. tahmlrmdu says:

    ந.க.2200-12-ஆ1 நாள் 21.03.2012. மனுதாரர் தெரிவித்த பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக மேலுார் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு எண் ஓ.எஸ்.78-2012 நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற வழக்கு முடிவுற்றதும் தீர்ப்பாணையின்படி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.