மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ‌படையனேந்தல்பட்டி,தட்சன்பட்டி
கொடுக்கம்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்கள் இரு ஊர்களுக்கும் சுடுகாடு இல்லாமல் பிணங்களை துாக்கிக்கொண்டு சிலர் புதைக்க விடாமல் தடுக்கிறார்கள் ஆதலால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்து இந்த விபரங்க‌ளை கொடுக்கம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களிடம் முறையிட்டோம் , அவர்களும் உடன் தாலுகா சர்வேயரும், கிராம நிர்வாக அலுவலர் அவர்களும் புறம்போக்கு இடத்தை அளந்து கொடுத்து இனிமேலும் நீங்கள் புதைத்து வந்த இடத்திலேயே புதையுங்கள் என்று எங்களுக்கு ஆறுதல் கூறி வந்தார்கள். அளந்த நாள் 04-.03.2012 தாய் திட்டத்தில் சுடுகாடு ‌மேம்பாடு செய்ய ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் தயாராகி பணி தொடங்க உள்ள நிலையில் மாண்புமிகு புரட்சித்தலைவி திட்டத்திற்கு எதிர்ப்பாக பணியை தொடங்க விடாமல் கொன்னப்பட்டி 1.மலர் S/O ஜெயராஜ் 2. தனபாக்கியம் ஆகிய இவர்கள் மற்றும் சிலரும் பணியை நடைபெறவிடாமல் ‌தடைசெய்து வருகிறார்கள். எங்களுடைய சுடுகாட்டை மீட்டுத்தந்து எங்கள் கிராம மக்களை காப்பாற்றுங்கள் என்று மிகவும் பணிவுடன் வேண்டுகிற‌ோம்.

One Response to “இடப்பிரச்சினையை சரிசெய்து தர வேண்டுதல்”

  1. tahmlrmdu says:

    ந.க.12600-08- நாள் 21.03.2012. மனுதாரர் கோரியவாறு சுடுகாடு அமைக்க ஆட்சேபணை தெரிவித்த நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, சுடுகாடு அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. எனவே மனுதாரர் கோரியவாறு பிணங்களை புதைக்க எவ்வித இடையூறும் இல்லை என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.