மனு எண்:

அனுப்புநர் :
அ. அதிவீரராணி
543 ஆர்விபட்டி திருப்பரங்குன்றம் மதுரை 5

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்
நான் ஆதரவற்ற விதவை சான்று கேட்டு மதுரை கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்திருந்தேன். அங்கு தெற்கு வட்டாட்சியரை அனுகுமாறு அறிவுறுத்தினார்கள் .விசாரணையை திருப்பரங்“குன்றம் வருவாய் அலுவலா் முடித்து தெற்கு வட்டத்தில் சான்று பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்கள் ஆனால் தெற்கு வட்டத்தில் இதுகுறித்து கேட்ட போது என்னுடைய மனு வரவில்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது எனவே எனது மனுவின் நிலை குறித்தும மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்குமாறும் விரைவில் ்விதவை சான்று வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

2 Responses to “ஆதரவற்ற விதவை சான்று வழங்குவது தொடா்பாக”

  1. tahmsmdu says:

    மனுதாரர் தற்போது வெளியூரில் வசித்து வருவதால், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்க இயலாத நிலை உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

  2. madurai says:

    மனுதாரரின் மனு தொடர்பாக விசாரணை செய்ய மதுரை மேற்கு மண்டல துணை வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.