மனு எண்:

அனுப்புநர் :
எம். செல்வராணி
க-பெ.எம்.மணிமுடி(லேட்)
க.எண். 5-24 கீாியர் தெரு
தெற்குத் தெரு போஸ்ட்)
மேலூர் தாலுகா,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கணவணை இழந்த ஒரு விதவை. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனா். நான் குடிசை வீட்டில் குடியிருக்கிறேன். அது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை. எனவே அய்யா அவா்கள் கருணை கூா்ந்து பசுமை வீட்டுத்திட்டத்தில் எனக்கு ஒரு வீடு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.செல்வராணி.

One Response to “முதலமைச்சர் பசுமை வீடோ அல்லது இலவச வீடு கேட்டு மனு”

  1. bdomelmdu says:

    2011-2012ம் ஆண்டிற்கான பயனாளிகள் தோ்வு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. அடுத்ததாக 2012-2013-ம் ஆண்டு மேலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு பசுமை வீடு குறியீடு அரசால் ஒதுக்கப்படும் சமயத்தில் தங்களின் கோரிக‌்கை முன்னுரிமையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    ————–
    வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ),
    ஊராட்சி ஒன்றியம், மேலுார்