மனு எண்:

அனுப்புநர் :
பெ.துரைப்பாண்டி
7-144 தெற்கு தெரு செங்கப்படை
திருமங்கலம் வட்டம்.
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதிப்பிற்குரிய அய்யா,
திருமங்கலம் வட்டம், நேசநேரி எல்லைக்குட்பட்ட ஆதி திராவிடர் இலவச வீட்டுமனையினை 2001ல் வழங்கியதற்கு இன்று வரை நில அளவை செய்து கொடுக்கவில்லை. இதற்காக உசிலம்பட்டி தனி வட்டாட்சியர் அவர்களிடம் பலமுறை முறையிட்டும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தயவு கூர்ந்து எங்களுக்கு இந்த மனையிடத்தினை சர்வே செய்து கொடுத்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

3 Responses to “ஆதி திராவிடர் களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையினை நில அளவை சம்பந்தமாக.”

 1. dadwomdu says:

  ந.க.எண்.908-ஆதி7-2011
  மனுதாரர் கேரரிக்கை தொடர்பாக, தற்போது நிலம் அளந்து காட்டப்பட்டது.

 2. dadwomdu says:

  ந.க.எண்.908ஆதி7-2011

  உசிலம்பட்டி ஆதிந தனிவட்டாட்சியர் மற்றும் நிலஅளவர் ஆகியேரர் மேற்படி இடத்தினை அளந்து அதன் விபரத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 3. dadwomdu says:

  தங்களது மனு பரிசீலனை செய்யப்பட்டது. தொடர்புடைய உசிலம்பட்டி ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார். விரைஅவந்து நில அளவைரத செய்துதர வழிவகை செய்யப்பட்டு தனிவட்டாட்சியரின் நடவடிக்கை அறிக்கையினை பெற்று தங்களுக்கு விரைவில் விபரம் தெரிவிக்கப்படும்.