மனு எண்:

திருமண உதவித் தொகை கேட்டல்

அனுப்புநர் :
G.D.ஜீவப்பிரியா
த-பெ.G.S.தனுஷ்கோடி
5-2221, பாலாஜி நகா் 3வது தெரு, மேலமடை, வண்டியூா் மதுரை-625 020

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது திருமணத்திற்காக மாநகராட்சியில் உதவித் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். ஒன்பது மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது 31வது வார்டு மாநகராட்சிக்கு மாற்றியுள்ளனா். திருமண உதவித் தொகை தராமல் அலையவிடுகின்றனா். மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் கேட்டும் மனு வரவில்லை என்றும் சரியான தகவல் அளிப்பமறுக்கின்றனா்.எனவே, தாங்கள் தயவு செய்து எனது திருமண நிதிஉதவி தொகை வழங்ககி உதவிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள,

ஜீவப்பிரியா

One Response to “திருமண உதவித் தொகை கேட்டல்”

  1. comcorpmdu says:

    ஏற்பு. தாங்கள் திருமண நிதி உதவி பெறுவதற்கான தகுதிப்பட்டியலில் வரிசை எண்.2059 இருக்கிறீர்கள். அரசிடமிருந்து நிதி உதவி வரப்பெற்றவுடன் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காசோலை வழங்கப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.