மனு எண்:

செங்கல் காளவாசலுக்கு மண் அள்ள‌

அனுப்புநர்: மகாலட்சுமி த/பெ சதுரகிரி து.கிருஷ்ணாபுரம்[p.o]சாப்டூர் வழி,பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்;மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமம் உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் காளவாசல் வைப்பதற்கும் மண் அள்ளுவதற்கும் அனுமதி கேட்டு 18.2.2012 அன்று தாங்களுக்கு தொடுவானம்[பழையூர்]மூலம் மனு கொடுத்து இருந்தேன்.கனிம வளம் துணை இயக்குனர் மூலம் காளவாசல் சான்று கட்டணமும்,மண் அள்ள அனுமதியும்,விண்ணப்பக்கட்டணமும் கட்ட கூறினார்கள் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் 27.2.2012 அன்று துணை இயக்குனர்[கனிமம்]அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன்,மேலும் நான் பாரதப்பிரதமர் வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் k.v.i.c மூலம் sbi வங்கியில் கடன் பெற்று தவணையையும் முறையாக செலுத்தி வருகின்றேன்.எனவே எனக்கு கூடிய விரைவில் அனுமதி வழங்குமாறும் அனுமதி வழங்கும்வரை மண் அள்ள ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “செங்கல் காளவாசலுக்கு மண் அள்ள‌”

  1. ddminmdu says:

    மனுதாரருக்கு உரிய ஆவணங்களுடனும், முறைப்படியும் விண்ணப்பிக்க ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் அரசு விதிகளின்படி கிராமநிர்வாக அலுவலரிடம் கிராமகணக்குகள் பெற்று சமர்ப்பிக்கவில்லை. மனுதாரர் செங்கல் காளவாசல் அமைக்க மண் அள்ளும் பொருட்டு கோரியுள்ளதால் கனிம விதிகளின்படி உரிய முறையில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.