அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அம்பலக்காரன்பட்டி கிராமம்,
தும்பைப்பட்டி ஊராட்சி
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,
தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம் இல்லாமல், கலையரங்கத்தில் வைத்து நடத்துகிறோம். ஆகையால் எங்கள் ஊரில் அங்கன்வாடி மையக்கட்டிடம் அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தும்பைப்பட்டி ஊராட்சி, அம்பலகாரன்பட்டி கிராமத்தில் மககள் தொகை மற்றும் குழந்தைகள் வருகை குறைவாக உள்ளதால் இக்கிராமத்தில் குறு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக வருவாய்துறையில் இருந்து இடம் தேர்வு செய்து கொடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இடம் இலவசமாக பெறப்பட்டதும் கட்டிடம் கட்டுவதற்கு அரசின் அனுமதி வேண்டி அனுப்பி வைக்கப்படும்.