மனு எண்:

அனுப்புநர் :
கு.நல்லம ரெட்டியார்
த-பெ.குருவாரெட்டியார்,
டி.ஆண்டிப்பட்டி கிராமம்,
வாடிப்பட்டி தாலுகா,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

2009-ம் வருடத்தில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராஜம்மாள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் பல முறை மனு செய்து பெயர் நீக்கம் செய்து வழங்குமாறு கேட்டேன். பெயர் நீக்கம் செய்து தரவில்லை. எனவே நான் தங்களிடம் மேல் முறையீடு மனு செய்து உள்ளேன். இம் மனுவினை பரிசீலித்து தங்களது நேரடி பார்வையில் டி.ஆர்.ஓ. அவர்களின் விசாரணை வைத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
கு. நல்லமரெட்டியார்

One Response to “எனது பெயரில் உள்ள பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள ராஜம்மாள் என்ற பெரை நீக்குமாறு கேட்டல்”

  1. tahvptmdu says:

    மனுதாரர் உரிய ஆவணங்கள் கொடுக்கவில்லை. பட்டாவில் பெயர் நீக்கத்திற்கு உரிய ஆதார ஆவணங்கள் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மனு தள்ளுபடி என்ற விபரம் மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.