மனு எண்:

கல்விக்கடன் பெறுவது சம்பந்தமாக

அனுப்புநர் :
ஜே. ஜோயனா
த.பெ. யு. ஜேசுதாஸ்
எண் 2ஃ471 கிருஷ்ணா தெரு
உச்சப்பரம்புமேடு
திருப்பாலை
மதுரை 14

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்படி முகவாியில் வசித்து வருகிறேன். எனது அப்பா கட்டிடக் கூலித் தொழிலாளி. கடந்த ஆண்டு ஜீலை மாதம் அரசு ஒதுக்கீட்டில் தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் நாடாா் சரஸ்வதி பொறியியல் கல்லுாாியில் சிவில் இன்ஜினியாிங் முதலாமாண்டு படித்து வருகிறேன். எனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள சின்டிகேட் வங்கியில் எனது தகப்பனாா் கல்விக்கடன் கேட்டு மனு செய்து ஐந்து மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வங்கி மேலாளரை அணுகிய போது ஏற்கனவே போதுமான நபா்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுவிட்டது. எனவே இனி மேலும் தர இயலாது என்று மறுத்துவிட்டாா். எனது தந்தையின் சொற்ப வருமானத்தில் என்னுடைய குடும்பத்திற்கும் சகோதரா்களின் படிப்பிற்கும் செலவு செய்ய வேண்டி உள்ளதால் எனது படிப்பிற்குத் தேவையான வங்கிக்கடன் பெற்றுத்தர ஆவண செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

One Response to “கல்விக்கடன் பெறுவது சம்பந்தமாக”

  1. dgmcanmdu says:

    ஏற்பு. சிண்டிகேட் வங்கி திருப்பாலைக்கு அனுபபட்டுள்ளது.