மனு எண்:

அனுப்புநர் :
கே.டி.ராஜாமுகமது,
தலைவா் (சிஆா்பிசி)
2975, டிஎன்கச்பி, வில்லாபுரம்,
மதுரை 625 011

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாநகரம் தெற்குவெளிவீதி மஞ்சணக்காரத்தெருவில் கனரா வங்கி கீழ்காணும் குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது.
1.விவசாய நகை பெறுவதில் சுமார் 7 மணி நேரம் காத்திருக்கும் நிலை.
2.புதியதாக வங்கு கணக்கு திறப்பதில் 3 நாட்கள் மேலும் ஒரு நாளைக்கு 5 புதிய கணக்குகள்தான் திறக்கும் நிலை.
3.வாடிக்கையாளா் பணம் கட்டினால் அக்கவுண்ட பணம் வரவு வைக்க 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை.
4.பணம் எடுக்க 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை.
5.நகை கடன் நகை மதிப்பீட்டாளா் கட்டணமாக ரூ.255- வீதம் வசூல் செய்கிறார்கள். அனைத்து வங்கிகளைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாகும்.
மேற்படி குறைகளை நிவா்த்தி செய் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
கே.டி.ராஜாமுகமது.

One Response to “மதுரை தெற்குவெளி விதி கனரா வங்கி கிளையில் குறைபாடுகள் குறித்து புகார்.”

  1. dgmcanmdu says:

    எற்றுக்கொள்ளப்பட்டது. வாடிக்கையாளரின் சேவை பிரிவிற்கு அனுப்பபட்டுள்ளது.