மனு எண்:

அனுப்புநர் :
க.கணேசன்,
த-பெ.கருப்பையா,
கல்லம்பல்,
பனையூா் அஞ்.
திருப்பரங்குன்றம்
மதுரை-9

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எனது தகப்பனாருக்கு 3 மனைவிகளில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவியின் வாரிசுதாரி
ரான எங்களுக்கு உண்டான சொத்துகள் (நஞ்சை, புஞ்சை தோப்பு) எங்களுக்கு கொடுக்க மறுப்பதுடன் போலி பத்திரம் போட்டு 3வது மனைவியின் பிள்ளைகள், சொத்துகளை அனைத்தும் பயன்படுத்தி வருவதுடன், எங்களையும் கொலை மிரட்டல் செய்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் உரிய சொத்துகள் மீட்டு தரும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “பூா்விகசொத்து அபகாரித்து மற்றும் கொலை மிரட்டல் – குறித்து”

  1. spmdu says:

    ஜி3-6126(A)/12 dt. 12.03.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், மனுதாரர் தற்சமயம் அம்முகவரியில் இல்லை. அக்கம் பக்கம் விசாரித்ததில் எந்த விபரமும் தெரியவில்லை. மனுதாரர் தனது தகப்பனாரின் மூன்றாவது மனைவியின் பிள்ளைகள் என்று பொதுப்படையாக குறிப்பிட்டுள்ளார். அவர்களுடைய முழுவிபரங்களை இம்மனுவில் குறிப்பிடவில்லை. மனுதாரர் எதிர்மனுதாரர்களின் முழுமையான விபரங்களை அளித்தும், அதற்குண்டான ஆவணங்களை அளிக்கும்பட்சத்தில் இம்மனு மீது நடவடிக்கை எடுக்க இயலும். மனு தள்ளுபடி.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.