- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

சாலை வசதி வேண்டி

மனு எண்: தொடுவானம்/8445/22/02/2012
துறை: BDO – மதுரை மேற்கு
கிராமம்: ,சிறுவாலை

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சிறுவாலை கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
சிறுவாலை ஊராட்சி குமாரம் – நகரி சாலையில் சிறுவாலை பிரிவு முதல் செல்லனகவுண்டன்பட்டி புதுர் வரை உள்ள சாலை (5கீமி) மிக மிக மோசமான நிலையில் உள்ளதால் ‌பேருந்து வந்து செல்ல முடியவில்லை இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.எ‌னவ ே சாலையை செப்பனிட்டு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
ஊர் பொதுமக்கள் சார்பாக
பாஸ்கரன் எ நாகராஜன்
த‌‌ல‌ை‌வர்
சிறுவாலை ஊராட்சி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "சாலை வசதி வேண்டி"

#1 Comment By demjrurmdu On February 25, 2012 @ 6:42 am

கோட்டப் பொறியாளர் (நெ), நகரத்தை சார்ந்தது

#2 Comment By denhurbmdu On March 28, 2012 @ 2:21 pm

அய்யா
மனுதாரரால் குறிப்பிடப்பட்டுள்ள சாலையானது கி.மீ. 0/0-1/0 என்கிற இதர மாவட்ட சாலையாகும். இச்சாலை குமாரம்-சோழவந்தான் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையாகும். கி.மீ. 0/0-1/0 நீளத்திற்கு பிறகுள்ள சாலை சிறுவாலை பிரிவு முதல் செல்லனகவுண்டன்பட்டிபுதுார் வரையுள்ள சாலைப்பகுதி நெடுஞ்சாலைத்துறையைச் சார்ந்த சாலை இல்லை. என தெரிவிக்கப்படுகிறது.

#3 Comment By bdomdwmdu On March 30, 2012 @ 1:39 pm

நபார்டு திட்டத்தின் முலம் மேற்கண்ட சாலையினை
செப்பனிடபரிந்துரை செய்யப்பட்டுள்ளது நிதி ஒதுக்கீடு வரப்பெற்றதும் பணிகள் மேற்கொள்ளப்படுமென சிறுவாலை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8445/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-2/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.