மனு எண்:

அனுப்புநர் :
மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்.,
3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மேலூா் வட்டம், கீழையூா் கிராமத்தில் 6000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவா்களில் அரசு பணியாளா்கள் விசசாயிகள் வணிக பெருமக்கள் மற்றும் மாணவா்களின் வங்கிச் சேவைகளுக்கு மேலூா் போன்ற வெளியூா்களுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் வங்கி செயல்படுத்தற்கான கட்டிடத்தை ஒன்றிய நிர்வாகமும் கிராம் நிர்வாகத்திலிருந்து சோ்த்து கட்டிஉள்ளார்கள் இக்கட்டிடம் தற்போது மாடிப்பகுதியாகவும் வங்கி நடத்த பாதுகாப்பாகவும் ஊா்மத்தியில் கட்டடப்பட்டுள்ளது. எனவே சுதந்திரப்போராட்ட வீரா்கள் நிறைந்த எங்கள் கிராமத்திற்கு வங்கிகிளை தனியாக துவங்க பரிந்துரை செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “மேலுா் வட்டம் கீழையூா் கிராமத்திற்கு அரசு வங்கிக்கிளை வேண்டுவது குறித்து”

  1. dgmcanmdu says:

    எற்றுக்கொள்ளப்பட்டது. மனு உரிய நடவடிக்கைக்காக வட்ட அலுவலருக்கு அனுப்பபட்டுள்ளது.