மனு எண்:

அனுப்புநர் :
மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்.,
3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

கீழையூா் கிராமத்தில் 6000 மேறபட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் இவா்களில் 1000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கீழையூா் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள் இவா்களில் 8ம் வகுப்பிற்கு மேல் படிக்க வெளியூா்களுக்கு சென்றுதான் படிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவ மாணவிகளுக்கு பொருள் விரயமும், காலவிரயமு் ஏற்படுகிறது.

எனவே மாணவ மாணவிகளின் நலனுக்குகாக சுதந்திரப்போராட்ட வீரா்கள் நிறைந்த இந்த கிராம மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வரும் கல்வியாண்டிலிருந்து இங்கு ஒா உயா்நிலைப்பள்ளி துவங்க மாநில அரசிற்கு பரிந்துரை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “கீழையூா் கிராமத்தில் நடுநிலைப்பள்ளியை உயா்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டுவது குறித்து”

  1. ceomdu says:

    மனுதாரது கோரிக்கை தொடர்பாக அரசு விதிமுறைகளின்படியும் தேவையின் அடிப்படையிலும் கருத்துரு அனுப்பி வைக்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் பிரேரணை கேட்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.