மனு எண்:

அனுப்புநர் :
ஊர் பொதுமக்கள்,
பூஞ்சுத்தி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நாங்கள் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறோம். மேலூா்-திருப்புவனம் செல்லும் வழியில் பூஞ்சுத்தியில் இருந்து சுமாா் 100 பள்ளிக் குழந்தைகள் திருவாதவூா் மற்றும் மேலூா் அரசு பள்ளியில் படித்து வருகின்றாா்கள். அவா்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்வதற்கு பேருந்துகள் சாிவர இயங்குவதில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே எங்கள் ஊருக்கு பேருந்துகள் சாிவர இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
ஊா் பொதுமக்கள்

One Response to “பேருந்து குறித்த நேரத்திற்கு வராதது – சம்பந்தமாக”

  1. tnstccomml says:

    பள்ளி மாணவ மாணவியர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு மேற்படி வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளையும் உரிய கால அட்டவணைப்பிரகாரம் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.