மனு எண்:

புகார் மனு- சிந்துபட்டி கிராமம்.

அனுப்புநர் :
எம். பாண்டியம்மாள்
மாவட்ட பேரவை பிரிதநித அம்மா பேரவை
சிந்துபட்டி கிராமம்
மதுரை மாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேலே உள்ள முகவாியில் அம்மா பேரவை மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். நான் வசிக்கும் கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருவரும் சேர்ந்து எங்கள் ஊாில் உள்ள தொகுப்பு வீடுகளை ஊராட்சிமன்ற தலைவர் லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்தவர்களுக்கு வந்த அரசு இலவச வீட்டை தனக்கு நெருக்கமான உறவினர்களுக்கு கொடுத்து கட்டி வருகிறார். இது குறித்து கேட்டதற்கு நான்தான் தலைவர், உனக்கு இதுக்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லைஎன்று கூறி வாய் வார்த்தையில் திட்டுகிறார். 1)பேச்சியம்மாளுக்கு வந்த வீட்டை திரு.பொியகருப்பன் கட்டிவருகிறார். 2) நாகரத்தினம் வீட்டை திருமதி சந்தானம் 3) கருப்பாயி வீட்டை பேம்மு கட்டிவருகிறார். அய்யா உடன் விசாரணை செய்து தகுந்த வீட்டு உாிமையாளாிடம் ஒப்படைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “புகார் மனு- சிந்துபட்டி கிராமம்.”

  1. bdochemdu says:

    வணக்கம்,
    சிந்துபட்டி ஊராட்சி ராமசாமிபுரத்தில் 2011-12ம் ஆண்டுக்கு நாகரத்தினம் தஃபெ. பெரியகருப்பன் (ஆதி), கருப்பாயி கஃபெ. ராமன் ஆகிய இருவருக்கும் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு கிராமசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடிதம் ந.க.எண்.413, 2011,டி4 நாள். 19.2.2011ல் நிர்வாக அனுமதிப் பெறப்பட்டு வ.வ.அலுவலர் (கி.ஊ). அவர்களின் ந.க.எண். 2383 2011 டி5ன் படி வேலை உத்ததரவு வழங்கப்பட்டு தற்போது வீடு கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இதில் எவ்வித குறைபாடுககளும் இல்லை. சம்பந்தப்பட்ட பயனாளிகளே தொகுப்பு வீடுகளை கட்டி வருகிறார்கள். மனுதாரர் புகார் முற்றிலும் தவறானது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.