மனு எண்:

அனுப்புநர் :
ஆர். பிரமிளா
9ஃ5 பாக்கியலெட்சுமி வேலுச்சாமி இல்லம்,
ஜவஹர் நகர் 2வது தெரு,
திருமங்கலம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் திருமங்கலம் ஜவஹர் நகர் ரவுண்டானா பக்கம் உள்ள லதா மெடிக்கலில் 26 ஆண்டுகாலமாக சம்பளமில்லாமல் வேலை பார்த்து வந்தேன். எனது பெற்றோர் கடை உாிமையாளாிடம் எனக்கு திருமணம் ஆகும் பொழுது மொத்தமாக சம்பளத்தை சேர்்தது தாருங்கள் என்று சொன்னார்கள். கடை உாிமையாளரும் பணத்தைச் சேமித்து தருவதாக சொன்னார். கடை உாிமையாளர் பீட்டர் ஞானையா 10 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். உடல்நிலை சாியில்லாத போது அவரது வீட்டாாிடம் பிரமிளாவிற்க சம்பளம் கொடுக்காமல் வேலை பார்க்கிறாள் மொத்தமாக பணம் கொடுத்து அனுப்புங்கள் அல்லது கடையை கொடுத்து பிழைக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்.கடை உாிமையாளர் மகன் சோ வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். மகள் லதா,மருமகன் ஆபிரகாம் இருவரும் மதுரை அமொிக்கன் கல்லூாியில் புரபஸராக வேலை பார்க்கிறார்கள். நல்ல சம்பளத்தில் வேலைபார்ப்பதால் கடை நடத்த முடியாத நிலையில் கடையின் உாிமையாளர்மகள், மகன் இடத்து உாிமையாளர் பாலச்சந்தர் இன்னெருவர் ஆகியோர் முழு சம்மத்தடுன் எனக்கு கடையை கொடுக்க சம்மதித்தனர். கடையை என் பெயருக்கு லதா, ஆபிரகாம் சேர்ந்து பத்திரம் எழுதித்தந்தனர். மெலும் இப்பொழுது இருக்கும் நிலவரப்படி சம்பளத்திற்குப் பதிலாக பகடி தரவேண்டாம், கடையின் ரேக்குகள் கண்ணாடி பலகைகள் மேற்கூரைகளுக்காக என்னிடம் 1 இலட்சத்தது 25 ஆயிரம் வாங்கிக்கொண்டனர். எனக்கு உடல்நிலை சாியில்லை. மருந்துக் கடைக்குப் பதிலாக பேன்ஸி கடையும், ஜெராக்ஸ் மிஷின் வைத்து நடத்தி வருகின்றேன். எனக்கு வயது 58. கடை இருக்கும் இடத்து உாிமையாளர் பாலுச்சந்தர் ஊாில் இருந்து வந்து 5.10.2011-ல் கடையை புட்டு போட்டு புட்டிவிட்டார். திருமங்கலம் டவுன் காவல்நிலையத்தில் புகார் செய்து கடையை திறந்து நடத்த சொன்னார்கள். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் பாலச்சந்தர் வந்து கடையின் மேற்கூரையை பிய்த்து ரேக்குகளை திருடிசென்றுவிட்டார். காவல் நிலையத்தில் இருந்து பாலசந்தரை கூப்பிடால் வருவதில்லை. யாாிடம் சொன்னாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்கிறார். ஐயா என்மீது கருணை கூர்ந்து என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிய லதா, ஆபிரகாம் இருவரையும் கூப்பிட்டு விசாத்தது நான் 26 வருடங்கள் சம்பளமில்லாமல் உழைத்ததற்கு மொத்தமாக பணம் கொடுக்கும்படி சொல்லியும், கடையை புட்டியதால் என்பொருட்கள் எக்ஸ்பெயாி ஆகிய நிலையில் பாலச்சந்தர், லதா, ஆபிரகாம் மூவரும் எனக்கு பணம் கொடுக்கும்படி ஆவன செய்து தக்க நியாயம் வழங்கும்படி மிக்ப பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “நான் வேலை பார்த்த திருமங்கலம் டவுன் ஜவஹர் நகர் டவுண்டானா பக்கமுள்ள லதா மெடிக்கல் 26 வருடமாக வேலை பார்த்ததற்கு சம்பளம் மற்றும் கடைஉாிமையாளின் வாாிசுகளான மகள் லதா மகன் சோ என்னிடம் வாங்கிய பணம் 1,25,000- த்தை திருப்பிதர வேண்டுதல் – சம்பந்தமாக.”

  1. spmdu says:

    ஜி3-5312-12 நாள். 23.02.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், மனுதாரர் எதிர்மனுதாரரின் கடையில் வாடகைக்கு மெடிக்கல் ஸ்டோர் வைத்திருந்தவரிடம் வேலை செய்தவர். கடையி்ன் சொந்தக்காரர் இறந்துவிட்டார். இறந்தவரின் வாரிசுகள் கடையை காலி செய்து விட்டனர். மனுதாரர் கடையை தான் நடத்தவேண்டும் அல்லது பணம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மனுவை அனுப்பியுள்ளார். எனவே இம்மனு மீது மேல்நடவடிக்கை தேவையில்லை.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.