அனுப்புநர் :
ஊர் பொதுமக்கள்,
அலப்பலச்சேரி கிராமம்,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
நாங்கள் திருமங்கலம் வட்டம் அலப்பலச்சோி பஞ்சாயத்ில் வசித்து வருகிறோம். எங்களது ஊாில் குடிநீா வசதி 3 வாரமாக சாிவர வருவதில்லை. குடிநீர் வசதியை சாி செய்து தரும்படி எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி வி. ஜெயந்தியிடம் பலமுறை முறையீட்டும் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. எங்கள் ஊருக்கு நல்லது செய்யவந்த வார்டு கவுன்சிலர் ிரு. அன்பழகன் அவர்களை நல்லது செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டார். எனக்கு யார் யார் ஓட்டு போட்டிங்களோ அவர்களுக்கு மட்டும் தான் நல்லது செய்வேன் இதை அலப்பலச்சோி கிராம பொது மக்கள் எதிர்்தது கேட்டால் நீங்கள் யாாழடம் வேண்டுமானாலும் சொல்லுங்க எந்த உதவியும் செய்யமாட்டேன் என்று கூறுகிறார். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ந.க எண் 978/10/தி1 நாள்.24.02.2012
அலப்பலச்சேரி ஊராட்சியில் குடிநீர் வசதி வேண்டி மனு வரப்பெற்றுள்ளது. தற்சமயம் நெடுஞ்சாலை துறையினர் டி.புதுப்பட்டி முதல் மங்கல்ரேவு வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் போது சேடபட்டி கூட்டு குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு வேலை நடைபெற்று குழாய் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் சரிவர வராததால் ஆழ்துழை கிணறு மோட்டார் இயங்க சிரமமாக உள்ளது. தற்சமயம் குடிநீர் வசதி நல்லமுறையில் வழங்கப்பட்டு வருகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.