மனு எண்:

பணிமாறுதல் கோாி விண்ணப்பம்

அனுப்புநர் :
க. சாந்தி
மதுரை கிழக்கு ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளி
செங்கோட்டை.
மதுரை-20

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேலே கண்ட துவக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுாந்து வருகிறேன். மதுரை கிழக்கு ஊராட்சி அண்டமான் கிராமத்திலிருந்து தினமும் சுமார் 50 கி.மீட்டர் தூரம் பேருந்தில் சென்றும் சிவகங்கை மெயின் ரோட்டிலிருந்து பஸ் வசதி இல்லாத காரணத்தினால் 3 கி.மீ. தூரம் நடந்து செல்ல ஒருவாின் துணை நாடவேண்டி இருக்கிறது. எனது ஊர் (அண்டமான்) அருகில் சுமார் 3 கி.மீ துரத்தில் உள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி துவக்கப்பள்ளியில் சமையல் உதவியாளர் பணி காலியாக உள்ளதை அறிந்தேன். அந்த இடத்தில் எனக்கு பணி மாற்றம் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “பணிமாறுதல் கோாி விண்ணப்பம்”

  1. panmmdu says:

    நடப்பு ஆண்டிற்க்கான கலந்தாய்வு முடிவடைந்துவிட்டது.தனியரது பணி மாறுதல் கோரும் விண்ணப்பம் அடுத்த கலந்தாய்வின் போது பரிசீலிக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.