மனு எண்:

பொது இட ஆக்கிரமிப்பு – சம்பந்தமாக.

அனுப்புநர் :
கிராம பொதுமக்கள்
காமாட்சிபுரம்,
மேலமாத்தூர் ஊராட்சி
திருப்பரங்குன்றம் ஒன்றியம்
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நாங்கள் இதே ஊாியல் புா்விகமாக வசித்து வருகிறோம். எங்கள் ஊாின் பழைமையான கோவில் காமாட்சி அம்மன். இந்த கோவிலில் ஆடிமாத முளைப்பாாி திருவிழா நடைபெறும் இடமான பஞ்சாயத்துபோர்டு அருகில் உள்ள வீதி அதை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துகொண்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. எனவே அந்த ஆக்கிரமிப்பினை பொதுநலன் கருதி அகற்றிதரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

One Response to “பொது இட ஆக்கிரமிப்பு – சம்பந்தமாக.”

  1. bdotpkmdu says:

    ‌மேலமாத்துார் ஊராட்சியை சேர்ந்த காமாட்சிபுரம் கிராம பொது மக்கள் தெரிவித்துள்ளவாறு முளைபாரி திருவிழா நடைபெறும் இடமான பஞ்சாயத்து பேரர்டு அருகிலுள்ள வீதி அதை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு இல்லை என நேரில் சென்று ஆய்வு செய்த இவ்வலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) தெரிவித்துள்ளார் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்)
    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்