மனு எண்:

பேருந்து நிறுத்தம் செய்வது

அனுப்புநர்: சி.பாண்டி,
சின்னக்கட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

உசிலம்பட்டி- பேரையூர் சாலையின் நடுவில் சின்னக்கட்டளை கிராமம் அமைந்து்ளளது. இங்கு பக்கத்து கிராமமான பெரியகட்டளை, சென்னம்பட்டி, செம்பரனி, செட்டியபட்டி, காளப்பன்பட்டி, பெருங்காமநல்லலுர் , அதிகரிபட்டி, பாலர்பட்டி, பால்வண்ணம்பட்டி மற்றும் பராம்பட்டி போன்ற கிராம மக்கள் சின்னக்கட்டளைக்கு வந்து தான் தேனி , ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் குமுளி, போடி,உசிலம்பட்டி , பேரையூர் செல்கிறார்கள்.
ஆனால் கன்னியாகுமரி ,ராஐபாளையம், பாபநாசம், குற்றாலம் முதல் – தேனி, குமுளி, போடி வரை
செல்லும் பேருந்துகள் சின்னக்கட்டளையில் நிற்காமல் செல்கிறது.இதனால் கல்லுரிக்கு செல்லும் மாணவர்களும் வெளியூர் செல்லும் பெதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் கல்லுரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொது
மக்கள் நலன் கருதி கீழ் கண்ட சின்னக்கட்டளைபேருந்துகளை பேருந்து நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்யுமாறு அன்புடன் ‌கேட்டு கொள்கிறேன்
TN- 57-1865. TN-67-0763, TN-67-0765, TN-57-1803, TN-57-1759, TN-57-1957, TN-57-1558

One Response to “பேருந்து நிறுத்தம் செய்வது”

  1. tnstccomml says:

    மேற்படி பேருந்துகள் எங்களது கழக திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களின் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது என்பதையும் எனவே மேற்படி இரண்டு மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கும் தகவல் தெரிவித்து சின்னக்கட்டளை கிராம பொது மக்களின் கோரிக்கையை நிறைவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    பொது மேலாளர் த.நா.அ.போ.கழகம் மதுரை.