- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

செங்கல் காளவாசலுக்கு மண் அள்ள அனுமதி கேட்டல்

மனு எண்: தொடுவானம்/8367/18/02/2012
துறை: அனைத்து துறைகள்,துணை இயக்குநர் (கனிமம்)
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: ச.மகாலட்சுமி த/பெ சதுரகிரி டி.கிருஷ்ணாபுரம் பின்கோடு 625705.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமம் உட்கடை து.கிருஷ்ணாபுரம்தில் வாழும் நான் 12ம் வகுப்புபடித்துள்ளேன்.பாரதப்பிரதமர்சுயவேலைப்புத்திட்டத்தின் கீழ் கே.வி.ஜ.சி.மூலம் செங்கல் காளவாசல் வைப்பதற்கு எம்.கல்லுப்பட்டி பாரதமாநில வங்கியில்ரூ 5 லட்சம் 8.12.2009அன்று கடன்பெற்றுள்ளேன் மாதம்600நபர்களுக்குவேலை வழங்கி வருகின்றேன் எனக்குகாளவாசலுககுதேவையானசெம்மண் அள்ளுவதற்கு சர்வேஎண்292/2யுல் உள்ள க.சின்னராசுத்தேவர் இடதிலும் காளவாசல் வைப்பதற்க்குசர்வேஎண்187/3ல்செந்தட்டிகோனார் மகன்மாரியப்பன் இடத்திலும் அனுமதிவழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "செங்கல் காளவாசலுக்கு மண் அள்ள அனுமதி கேட்டல்"

#1 Comment By tvmadmin On March 1, 2012 @ 7:53 am

செங்கல் காளவாசல் வைப்பதற்கும் மண் எடுப்பதற்கும் கிராமக் கணக்கு நகல்களுடன் நில உரிமையாளர்களின் சம்மதக்கடிதங்களுடனும் காளவாசல் பதிவு சான்று கட்டணம் ரூ.100ஃ- மண் எடுப்பதற்கு ஆண்டு கட்டணம் ரூ.6000ஃ- விண்ணப்பக்கட்டணம் ரூ.1500ஃ- ஆகியவை செலுத்திய விபரங்களுடன் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8367/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.