மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
நாவினிப்பட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நாங்கள் நாவினிப்பட்டி ஊராட்சிகுட்பட்ட சத்தியபுரம் கிராமத்தில் பூர்வீகமாக வசித்து வருகிறோம். நாங்கள் எங்கள் வீடுகள் வயல்களுக்கும் நாவினிப்பட்டி கிராமம் பழைய சர்வே எண்.74/4 ல் வண்டிப்பாதை நடைபாதையாக பயன்படுத்தி வந்தோம். இந்த பாதையைத் தவிர எங்களுக்கு வேறு பாதை கிடையாது. இதில் புதிய சர்வே எண்.74/8 கட்டப்பட்ட தெருவில் மொ.நொண்டிச்சாமி வீட்டின் மேற்குப் பகுதி தெற்கு நோக்கி செல்கிறது. இதில் மேற்படி நபர் ஆக்கிரத்து வீடு கட்டியுள்ளார். இதனால் எங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு செல்லமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றி தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேர்ம்.

2 Responses to “பாரதை ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை அகற்றக்கோரி”

 1. bdomelmdu says:

  நாவினிப்பட்டி ஊராட்சி சத்தியபுரம் கிராமத்தில் சர்வே எண்.74/4-ல் உள்ள வண்டிப்பாதை நெடுஞ்சாலைத் துறையால் சாலை அகலப்படுத்தும் ‌போது எடுக்கப்பட்டுள்ளது. சர்வே எண்: 74/8-ல் உள்ள பட்டா இடம் திரு.M.நொண்டிச்சாமி என்பவரின் பெயரில் உள்ளது. அவருடைய இடத்தில் தான் அவர் வீடு கட்டியுள்ளார். அதில் ஆக்கிரமிப்பு ஏதும் அவரால் செய்யப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலரால் M.நொண்டிச்சாமிக்குரிய பட்டா நிலம் 74/8 சர்வே எண்ணில் தான் உள்ளது என கிராம நிர்வாக அலுவலரால் சான்றளிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ————–
  வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

 2. tahmlrmdu says:

  ந.க.15061-11-ஆ1 நாள் 02.03.12. மனுதாரர் அகற்றத் தெரிவிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நத்தம் சர்வே எண் 74-4 வண்டிப்பாதை புறம்புகலாகும். மேற்கண்ட வண்டிப்பாதை புறம்புகல் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட புறம்புகல் என்பதால், மேலுார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு ஆக்கிரமிப்பை அகற்ற தெரிவிக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்க்ப்படுகிறது.