அனுப்புநர் :
க.சிவராமகிருஷ்ணன்,
த-பெ.கருப்பையா
10-8-31 சிவன் கோவில் தெரு, அய்யா் காம்பவுண்டு
சோழவந்தான்.
பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,
நான் வாடிப்பட்டி வட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தைச் சார்ந்த மலைவேடன் சாதிசை் சார்ந்தவான். இதற்கு ஆதாரமாக எனது தந்தை மற்றும் பெரியப்பா ஆகியோரின் மலைவேடன் சாதிச் சான்றுகளும் உள்ளது. எங்களுக்கு அரசு சலுகைகள் பெற வேண்டி உள்ளதால் எனக்கும் எனது தம்பி க.கிருபாகரன் என்பவருக்கும் மலைவேடன் சாதிச்சான்று வழங்கிட பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ந.க.எண். 1135-12-எல் நாள்: 20.02.2012
வட்டாட்சியரின் அறிக்கை பெற்று சான்று கேட்பது சம்பந்தமாக முடிவு செய்யப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.
வருவாய் கோட்டாட்சியர், மதுரை