மனு எண்:

அனுப்புநர் :
அனுப்புநுா்
திருமதி.லதாமாரீஸ்வரி,
க-பெ.வி. லோகநாதன்-லேட்
500, கற்பகநகர்,
கே.புதூர்,
மதுரை -7

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனது கணவர் சாலை விபத்தில் 27.10.2010ல் இறந்து விட்டார். நான் தையல் ஆசிரியா் பயிற்சி படித்துள்ளேன். எனக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனா். 28.07.2011 அன்று விதவைச்சான்றுக்கு வருவாய் கோட்டாட்சியா் அவா்களால் விசாரணை செய்யப்பட்டது. இன்று வரை எனக்கு விதவைச்சான்று வழங்கவில்லை. நான் மிகவும் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறேன். என்னுடைய மனு எண். 4186 ஆகும். வேலை வாய்ப்பு அலுவலகம் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வ்தற்கு இச்சான்று தேவைப்படுவதால் தயவு செய்து எனக்கு வித9வச்சா்ன்று வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் ்கொள்கிறேன்.

One Response to “ஆதரவற்ற விதவைச்சான்று வழங்க கேட்டல் தொடா்பாக”

  1. rdomdu says:

    ஓ.மு. 1175-12-ஜே நாள்: 20.02.2012
    தனியருக்கு ஆதரவற்ற விதவைச் சான்று வழங்கப்பட்டுவிட்டது.

    வருவாய் கோட்டாட்சியர், மதுரை.