மனு எண்:

அனுப்புநர் :
அனுப்புநர்
திரு.எஸ்.ராஜ்குமார்,
தஃபெ. சுப்பிரமணியன்,
4எ, விநாயகா் நகர் மேற்கு முக்தா காலனி, பசுமலை,
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நாள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் இரயில்வே காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். னன் தந்தை வீட்டு பத்திரத்தை வைத்து வீடு கட்டும் கடன் பெற்று இருந்தார். அவா் கடன் முழுவதும் வட்டியுடன் செலுத்தியும் பத்திரம் திரும்ப வழங்காததால் என்னுடைய இன்ஜினியரிங் படிப்பிற்கு கல்வி கடன் பெற்று படிப்பை தொடர முடியாமல் உள்ளது. எனவே என்னுடைய படிப்பை தொடர்வதற்கான எங்களுடைய வீட்டுப்பத்திரத்தினை தயவு செய்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “புகார் – வீடு கட்டும் கடன் முழுவதும் செலுத்திய பின்பும் வீட்டு பத்திரம் வழஙகாதது தொடா்பாக”

  1. tvmadmin says:

    திருச்சி இருப்புப்பாதை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் திரு.ஆர்.சுப்பிரமணியன் என்பவர் தனது மனுவில், அவரது வீடு கட்டும் முன் பணத்திற்கான கணக்கீட்டுத்தாள் தயார் செய்யப்பட்டது தொடர்பாக மனு அளித்துள்ளார். மனுதாரர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்ட கணக்கீட்டுத்தாள் சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளதாலும், அவர் பணிபுரியும் அலுவலகத்தால் தயார் செய்யப்பட்ட கணக்கீட்டுத்தாள் தான் சரியானது என்று தெரிவித்துள்ளதாலும், இது குறித்து சென்னை மாநிலக் கணக்காயர் அலுவலகத்திற்கு உரிய விபரங்கள் அனுப்பி தனியரின் கோரிக்கையினை நிறைவேற்றி தர திருச்சி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியரது அடமான ஆவணங்களை அனுப்பக் கோரி மதுரை மாவட்ட ஆவணக்காப்பக ஆராய்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்கள் வரப்பெற்றதும் அடமான ஆவணங்களை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது.