மனு எண்:

விதவை உதவித் தொகை வழங்கிட வேண்டி

அனுப்புநர்: ‌எ. தனம்
க/பெ ‌அய்யாச்சாமி (லேட்)
பேச்சியம்மாள் ‌கோவில் ‌தெரு
குருவித்துறை கிராமம்,
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது கணவா் இறந்துவிட்டார். எனது இரண்டு மகன்கள் திருமணமாகி வெளியூர் குடிபெயர்ந்து விட்டனர். தற்போது ஆதரவற்ற நிலையில் நான் வறுமையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு அரசு வழங்கும் விதவை உதவித் தொகை வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எ. தனம்

One Response to “விதவை உதவித் தொகை வழங்கிட வேண்டி”

  1. madurai says:

    மனுதார் தனம் என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவும் உள்ளது. ரூ.80,000 மதிப்புள்ள சொந்த வீடு உள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.